அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மதனத்தூர் நடுநிலைப் பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனையடுத்து பள்ளி சார்பில் கூடுதல் கட்டிடம் அமைக்க கோரிக்கை மனு அளித்து இருந்தனர். இதனையடுத்து தமிழக அரசு அன்பழகனார் பள்ளி அறக்கட்டளை சார்பில் 70.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய
கூடுதல் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியது. இதன் பேரில் 4 வகுப்பறையுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.