Skip to content

கரூரில் மசாஜ் சென்டர் குறித்த விளம்பர போஸ்டரால் பரபரப்பு….

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு, தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் ஈடுபட்ட நபர்களை கரூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் வடக்கு, 3-வது

கிராஸ் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களுடன் இடம்பெற்ற விளம்பர போஸ்டரின், புகைப்படம் ஒன்று செல்போன் எண் விபரங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கரூர் நகர காவல் துறையினரிடம் விளக்கம் கேட்டபோது, மர்ம நபர்கள் யாரேனும் இவ்வாறு போலியான தகவலை பரப்பி இருக்கலாம் எனவும், அந்த முகவரியில் சந்தேகப்படும்படி எதுவும் நடைபெறவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!