Skip to content
Home » மணப்பாறையில் 25 ஆயிரம்பேர் பங்கேற்கும் சாரணர் பெருந்திரளணி……ரூ.39கோடி நிதி ஒதுக்கீடு

மணப்பாறையில் 25 ஆயிரம்பேர் பங்கேற்கும் சாரணர் பெருந்திரளணி……ரூ.39கோடி நிதி ஒதுக்கீடு

  • by Authour

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி,   தேசிய அளவிலான சாரண இயக்கத்தின் வைர விழா  ஆண்டு ஜாம்போரி நடத்தப்படும் என   சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி வரும் ஜனவரி மாதம்  திருச்சி மாவட்டம்  மணப்பாறையில்  தேசிய சாரண, சாரணியர் ஜாம்போரி நடத்தப்படுகிறது. இதற்காக  தமிழக அரசு ரூ.39 கோடி  ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது:
பாரத சாரணர் இயக்கத்தின் வைர விழா 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக அரசால் நடத்தப்படவுள்ளது. இந்த விழா தேசிய அளவிலான கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா பெருந்திரளணியாக மொத்தம் 7 நாள்கள் நடைபெறவிருக்கிறது.

அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இசைக்குழு அணிவகுப்பு, வண்ணமிகு அணிவகுப்பு, உடல் திறன் வெளிப்பாடு, நாட்டுப்
புற நடனம், உணவுத் திருவிழா, சாகச நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்த விழாவில் தேசிய  அளவில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சாரண, சாரணியர்கள் இயக்கத்தை  சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்
கின்றனர்.

இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக, சாரணர் இயக்குநரகத்தின் மாநிலச்செயலர் ரூ.39.07 கோடி நிதியை தமிழக அரசிடம் கோரியிருந்தார். அதையேற்று, சாரணர் இயக்குநரகத்தின் வைரவிழா, கலைஞரின் நூற்றாண்டு நினைவு விழா நடத்துவதற்காக ரூ.39 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் நிதிக்கு ஒப்பு
தல் வழங்கப்படுகிறது. இதில் மாநில அரசு நிதியிலிருந்து ரூ.5 கோடி. தமிழக பாடநூல் கழக நிதியிலிருந்து ரூ.10 கோடி, பொது, தனியார் பங்களிப்பு தொகையிலிருந்து ரூ.24 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் என மொத்தம் ரூ.39 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *