இன்று மாலை சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை பெறும் நிலையில், நடிகை ஜோதிகா வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து மாஸ் காட்டியிருக்கும் வீடியோ ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால், அது அவசியமில்லை என்று சொல்லி இந்தத் தடைகளை வித்யாபாலான், நித்யா மேனன் போன்ற பல நடிகைகள் உடைத்து, வெற்றிகரமாகவும் சினிமாவில் இயங்கி வருகிறார்கள். இருந்தாலும் நடிகர்கள் என்பதையும் தாண்டி, உடல்நலன் பேணுதல் என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒரு விஷயம்.
உடற்பயிற்சி, யோகா, ஜிம் வொர்க் அவுட் குறித்த விஷயங்களை, தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள் பேசும்போதும், அதுதொடர்பான வீடியோக்களைப் பகிரும்போது அவர்களது ரசிகர்களுக்கும் இன்ஸ்பையரிங்கான விஷயமாக இருக்கும். அப்படி, நடிகை ஜோதிகா, மும்பையில் இருக்கும் தனது வீட்டில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
45 வயதைக் கடந்த ஜோதிகா ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார். இதுவே தன் இளமை ரகசியம் என சிரிப்பவர், ‘உடற்பயிற்சியால் நீங்கள் உடல் எடையை மட்டும் குறைக்க மாட்டீர்கள். அதன் மூலம் புதிய வாழ்க்கையையும் பெறுகிறீர்கள்’ என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஜோதிகாவின் இந்த வெறித்தனமான வொர்க்கவுட் வீடியோவுக்கு பல பிரபலங்கள் கூட ஃபயர் விட்டு வருகின்றனர்.
ஒரு பக்கம் ‘கங்குவா’ படத்திற்காக நடிகர் சூர்யாவும் ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு இணையாக ஜோதிகாவும் ஃபிட்னஸில் போட்டி போடுவதைப் பார்த்து ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.