Skip to content
Home » 12மணி நேர வேலை மசோதா…. வாபஸ் ஆகிறதா?

12மணி நேர வேலை மசோதா…. வாபஸ் ஆகிறதா?

2023 ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்தச் சட்டமுன்வடிவு 21.4.2023 ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்கள் விரும்பினால் தினமும் 12 மணி நேரம் 4 நாட்ள் வேலை செய்தால் 3 நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த சட்ட மசோதாவின் முக்கிய அம்சங்கள், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டத்திலிருந்து இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது, தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விளக்கமளிக்க பிற்பகல் 3 மணிக்கு தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தொழிற்சங்கங்கள் தரப்பில் – கடும் எதிர்ப்பு, அரசு தரப்பு விளக்கத்தை ஏற்க மறுத்தால் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை சட்டமாக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், உடனடியாக திரும்பப்பெறவும் அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *