சீனாவில் இருந்து எச்.எம்.பி.வி தொற்று இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. கர்நாடகா, குஜராத்தில் 3 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, சேலத்தில் தலா ஒருவர் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து பீதி அடையவேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
தும்மல், இருமல் வரும்போது வாய், மூக்கை மூடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசல் மிகுந்த இடங்களில் முககவசம் அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த் தொற்றுகளுக்கு போன்ற தடுப்பு நடவடிக்கைதான் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றுக்கும் உள்ளது. இந்த வைரஸ் தொற்று கட்டுப்படுத்தக்கூடியது என்பதால் பீதி அடையத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வருவோர் முககவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்து உள்ளார்.