தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய. 32 கிலோ 663 கிராம் தங்கம் நகைகள் உள்ளிட்ட பொன் இனங்களை உருக்கி மும்மையில் உள்ள அரசுக்கு சொந்தமான ஆலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் வரும் வருவாயை கோவில் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் முதல் முறையாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம் உள்ளிட்ட பொன் இன பொருட்களை ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி துரைசாமி ராஜு
மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணா உள்ளிட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உருக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் தற்பொழுது நடைபெற்று வருகிறது.