கோவை மாவட்டம்
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் கொங்கு மண்டலத்தின் காவல் தெய்வமாக இக் கோவிலுக்கு தினசரி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து வழி விட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் வரும் டிசம்பர் 12ம் தேதி இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
மேலும் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு வெள்ளி சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம் மாசாணியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம்
நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து கோவில் புனரமைப்பு அமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி பாலாலயம் முடிவடைந்த நிலையில் மூலஸ்தானம் மற்றும் பரிவாரம் பூஜை நிகழ்ச்சி இன்று 10.30 மணி அளவில் தொடங்கப்பட்டது .
மேலும் வரும் டிசம்பர் 12ம் தேதி குடமுழுக்கு என்னும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது . இந்தத் தகவலை கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் தெரிவித்தார்.