திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் மருத காளியம்மன் (பிடாரி அம்மன் )கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த பகுதி மக்களின் குலதெய்வமாகவும் வழிபாட்டு தெய்வமாகவும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி கூத்தைப்பார் சாமியார் தெருவை சேர்ந்த அப்பாவு மகன் முருகேசன் என்பவர் கோவில் பூஜை முடித்துவிட்டு இரவு பூட்டிவிட்டு சென்றவர் இன்று கோவிலை வந்து திறக்க பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது மருதகாளியம்மன் கழுத்தில் இருந்த தாலி மட்டும் மர்ம நபர்கள் வெட்டி
எடுத்துச் சென்றுள்ளனர். அந்த தாலி சுமார் ஒரு பவுனுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து முருகேசன் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் வரைந்து சென்று பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூத்தைப் பார் செவந்தான் குளம் கரையில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் மற்றும் மகா மணி கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளநிலையில் தற்போது மருதகாளியம்மன் கோவில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போய் உள்ளதா அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.