Skip to content
Home » திருமணம் எப்போது? ராகுல் ருசிகர தகவல்

திருமணம் எப்போது? ராகுல் ருசிகர தகவல்

  • by Authour

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை  மேற்கொண்டுள்ளார்.  அவரிடம்   அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்தார். அக்கட்சியின் தலைவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வீடியோவில், கேள்வி கேட்கும் நபர், எந்த தருணத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்? அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி,  சரியான பெண் கிடைத்தால் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். மேலும் காங். எம்பி ராகுல்காந்தி, எனது பாட்டியார் இந்திரா தான் எனது வாழ்வின் காதல், இரண்டாம் தாய். நான் அது போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வேன். தான் விரும்பும் பெண் அம்மா மற்றும் தன் பாட்டியின் குண நலன்கள் கலந்து இருந்தால் நல்லது என பதில் அளித்துள்ளார். 52 வயதாகும் ராகுல்காந்தி. தற்போது இந்திய ஒற்றுமை யாத்திரையை வலியுறுத்தி ஜம்மு காஷ்மீரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *