Skip to content

திருமணம் செய்வதாக கூறி ஆபாச பேச்சு…. ஓபிஎஸ் மகன் மீது இளம்பெண் புகார்…

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண், “எனது குடுபத்தினரும் ஓபிஎஸ் குடும்பத்தினரும் நண்பராக பழகி வந்தோம். ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி. ஆனந்தியின் மற்றொரு தோழியான மலருடன் ஓபி ரவீந்திரநாத்திற்கு தொடர்பு உள்ளது. குடும்ப பிரச்சனையால் கடந்த 2020 ஆம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்துவிட்டேன்.

இந்த சூழலில் ரவீந்திரநாந்த், என்னுடன் போனில் பேசிவந்தார். நான் அவரை அண்ணாகவும், ஓ.பன்னீர்செல்வத்தை அப்பாவாகவும்  பார்க்கிறேன். ஆனால் ரவீந்திரநாத், என்னிடம் ஆபாசமாக பேசுகிறார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவரோ என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறுகிறார். ஆபாசமாக வீடியோ காலில் வா என அழைக்கிறார். இதுகுறித்து ரவீந்திரநாத் மனைவி மற்றும் ஓபிஎஸிடம் புகார் அளித்தேன். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். என்னிடம் வீடியோ கால் ஆதாரங்கள் உள்ளன” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!