Skip to content

2413 ஜோடிகளுக்கு மெகா திருமணம்… கின்னஸ் சாதனை ….

  • by Authour

 ராஜஸ்தானைச் சேர்ந்த மகாவீர் கோஷாலா கல்யாண் சன்ஸ்தான் என்ற தொண்டு நிறுவனம் ஏழை மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அறக்கட்டளை சார்பில் கடந்த மே 26-ம் தேதி பரன் நகரில் இந்து, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த 2,413 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

மணமக்கள் மாலை மாற்றி பின்னர் அவரவர் மரபுப்படி புரோகிதர்கள் அல்லது தங்கள் மதகுரு மார்கள் மூலம் திருமணம் செய்து கொண்டனர். திருமண சடங்குகள் 6 மணி நேரத்தில் முடிவடைந்தது. பின்னர் அனைத்து தம்பதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அரசு பிரதிநிதிகள் மூலம் திருமண சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுமண தம்பதிகளுக்கு மாநில முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு தம்பதிக்கும் நகைகள், கட்டில், பாத்திரங்கள், பிரிட்ஜ், டிவி, இண்டக்சன் குக்கர்உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தம்பதிகள் மட்டுமல்லாது திருமண விழாவில் பங்கேற்ற அவர்களுடைய உறவினர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

இதனிடையே, அதிக தம்பதி களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு 963 தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதுதான் கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்தசாதனை இப்போது முறியடிக் கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!