Skip to content

திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!….

திருமண வரன் பார்க்கும் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமண தகவல் இணையதளம் மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுகின்றனர். திருமண தகவல் இணையதளங்களை கட்டுப்படுத்த என சட்டமோ, விதிகளோ உருவாக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி டீக்காராமன் தெரிவித்துள்ளார்.

எனவே, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் பதிவு  செய்ய வேண்டும் என்ற விதி வகுக்க வேண்டும் என்றும் ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என விதி இருந்திருந்தால் மோசடிகள் தடுக்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார். திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய சக்கரவர்த்தி என்பவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பெண் டாக்டரை திருமணம் செய்வதாக 80 பவுன் நகை, ரூ.68  லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சக்கரவர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

வயது முதிர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் விவாகரத்து ஆனவர்களை குறி வைத்து சக்கரவர்த்தி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. 17க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதால் முன்ஜாமீன் தரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!