தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற குடும்பத்தினர் இன்று மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா வந்தவர்கள் கடலில் குளித்த போது நிச்சயதார்த்தமான மணமக்கள் நவீன் குமார் நிவேதா மற்றும் சரவணன் ஆகிய 3 பேர் அலையில் சிக்கினர். இதில் நவீன் குமார் , சரவணன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். அலையில் சிக்கி காப்பாற்றப்பட்ட நிவேதா ஆபத்தான நிலையில் பொறையார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா். உயிரிழந்தவர்களின் 2 உடல்கள் மீட்கப்பட்டு பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.