சீனாவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்று வரும் நிலையில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சைலேஷ் குமார் தங்கப்பதக்கமும், மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.
இந்நிலையில் பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி
வாழ்த்து தெரிவித்துள்ளார். டி23 உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்றுள்ளது. அசாத்திய திறமைக்கான சான்று; மாரியப்பன் தங்கவேலுவின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்து என்று பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.