திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அமைந்துள்ள வரதராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்று மஞ்சள் நீராடுதல் விழாவை முன்னிட்டு அம்மன் திருத்தேரில் எழுந்தருளனார். பக்தர்கள் திருத்தேரை முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வந்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கல்வீச்சு நடந்துள்ளது இதில் சுமார் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி போலீஸ் எஸ் பி சுஜித்குமார், எ டி எஸ் பி குத்தாலிங்கம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் வரதராஜபுரம் கிராமத்திற்கு போலீசார் உடன் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தகராறு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயில் திருவிழாவில் கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாரியம்மன் கோயில் தேர் திருவிழா… இருதரப்பினர் மோதல்… திருச்சி எஸ்பி விசாரணை…
- by Authour
