சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் இரவு உற்சவர் மாரியம்மன் திருவிழா காட்சியளித்தனர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் மாரியம்மன், உற்சவர் மாவடி ராமசுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு
பல்வேறு பொருட்களை அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து வண்ண மாலைகள் அறிவித்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பிறகு மயில் வாகனத்தில் கொழுவிற்க செய்தனர்.
தொடர்ந்து ஆலயத்தில் பூசாரி சாமிக்கு மகா தீபாராதனை காட்டினார்.
பிறகு ஆலயத்திலிருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா தேர் வீதி, பூ மார்க்கெட், ஐந்து ரோடு, வ உ சி தெரு, பஜார் , மேட்டு தெரு உள்ளிட்ட பகுதியில் வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
ஆலயம் வந்து அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாவடி ராமசுவாமி ஸ்வாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டிய பிறகு திருவீதி உலா சிறப்பாக நிறைவு பெற்றது.
கரூர் தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சித்தரை 1 தமிழ் புத்தாண்டு மயில்வாகன திருவீதி உலா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வழியினும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.