சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வன்னிமுத்து-முத்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுவாதி (13), ஸ்வேதா (12), வனிதா (10) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூவரும் தமராக்கி அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர். வன்னிமுத்து மரம் வெட்டும் தொழிலாளியாக உள்ளார். அவரது மனைவி முத்தம்மாள் தினக்கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.

இதையடுத்து வனிதா மற்றும் சுவாதியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.