பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன் மால் சார்பாக கோ க்ரீன் மாரத்தான் போட்டி நடைபெற்றது.இதனை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 10கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 1 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் ,பெண்கள், குழந்தைகள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். முன்னதாக போட்டியை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓடினார்.
இதில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பிரிவு வாரியாக ரூபாய் இரண்டு இலட்சம் ரொக்க பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.