தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுடலை(62). இவர் நேற்று மாலை வீட்டின் பின்புறம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கையை மர்ம விலங்கு ஒன்று கடித்தது.
இதனால் அலறிய அவர், தன்னை கடித்தது என்ன என்பதை பார்த்துள்ளார். சிறிய அளவிலான பூனை போன்ற ஒன்று அங்கிருந்து ஓடியதைப் பார்த்தார். இதுதொடர்பாக அவர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கனிமொழி தலைமையில் அங்கு சென்றனர். அவர்கள், கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியில் பல்வேறு இடங்களில் அந்த விலங்கைத் தேடினர். அப்போது செந்தில் முருகன் நடுநிலைப் பள்ளி ஸ்டோர் ரூமில் அந்த விலங்கு இருப்பது தெரியவந்தது.
மேலும், அது அறிய வகை மரநாய் என்பதையும் வனத்துறையினர் கண்டறிந்தனர். சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் அந்த மரநாயைப் பிடித்தனர். பின்னர் அது பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு குதிரை மொழி காப்புக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதி நேரம் பரபரப்பை ஏற்பட்டது.