தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், கல்வி நிறுவனங்கள், நகர் பகுதிகள், ஊரக பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் என பகுதி வாயிலாக மொத்தம் 4,01,500 மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் இன்று (27.07.2023) இரட்டைமலை சந்து தலைமை மத்திய நாற்றங்கால் (எசனை அருகில்) பகுதியில் துவக்கி வைத்தார்கள்.இந்த மரநாற்றுகளானது உயர்மதிப்பு மரவகைகள், தடி மர
வகைகள் போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. மரக்கன்றுகள் தேவைபடுவோர் சிட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல், ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் – 2 ஆகிய ஆவணங்கள் கொடுத்து தேவையான அளவு பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ், வனச்சரகர்கள் பா.பழனிகுமரன்(பெரம்பலூர்), சுதாகர்(வேப்பந்தட்டை), முருகானந்தம் (சமூக காடுகள்), சங்கரேஸ்வரி (வனவியல் விரிவாக்கம்), சத்யா (காடுகள் உருவாக்கும் திட்டம்) பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் மற்றும் வனவர்கள், வனக்காப்பாளர்கள், விவசாய பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்..