கோவையை அடையாளம் காட்டும் வகையில் 300 கோடியில் அமைக்கப்படும் செம்மொழி புங்கா, நூலகம், கிரிக்கெட், ஹாக்கி மைதானங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என, கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) கோவை கிளையின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், சென்னைக்கு நிகராக கோவையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்பட்டு வருகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதன்மையான நகரமாக கோவை நகரம் மாறும். தினமும் 300 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கி வரும் பில்லூர் குடிநீர் திட்டத்தில், 400 மில்லியன் லிட்டராக உயர்த்த முடியும். கோவை நகரில் 200 கோடி ருபாய் செலவில் ரோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதாள சாக்கடை திட்டமும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவை கோவை நகரின் தரத்தை மேலும் உயர்த்தும், என்றார். அவிநாசி ரோடு மேம்பால திட்டம் விரைவில் முடிவு பெறும். மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கும். கோவையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்காக அரசு கோடிக்கணக்கில் முதலீடுகளை செய்து வருகிறது. திருநெல்வேலியில் நான் பணியாற்றியபோது, கிரெடாய் உடன் தொடர்பு ஏற்பட்டது. இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டபோதெல்லாம் இநு்த அமைப்பு உதவி வருகிறது. அதேபோன்ற அமைப்பு கோவையில் செயல்பட்டு வருகிறது. தனியார் பொதுத்துறை பங்களிப்புக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறது என்றார்.