புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர், குரு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று (30.08.2024) மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். உடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.தெய்வநாயகி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.