தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோயில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்த பெற்ற கோவிலாகும். கோவிலின் பின்புறம் ஆனைமலை ஆறு உள்ளது தற்போது ஆற்றின் பகுதிகளில் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளது. இதனால் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் என தண்ணீர் கொண்டு செல்லும் பகுதிகள் ஆகாயத்தாமரை அக்கிரமிப்பான் நீர் வழித்தடம் முற்றிலும் நீர் போகாத வண்ணம் உள்ளது,பல மாதங்களாக ஆனைமலை தாசில்தார், கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர்
பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் நலன் கருதி ஆகாயத்தாமரை முற்றிலும் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் முருகபூபதி மனுவை சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் அரசகுமார் அவர்களிடம் மனு அளித்ததாக தெரிவித்தார்,திடீரென சார் ஆட்சி அலுவலகத்திற்கு இலை, தலைகள் கட்டிக் கொண்டு வந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு ஏற்பட்டது.