தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் சென்னூர் நகரை சேர்ந்த தாசரிமது பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் அவர் உடலில் தீய சக்தி சேர்ந்துள்ளதால் அது அவர் உடலில் இருந்து வெளியேரும் வரை தாசரிமது உடல் நிலை சரியாகது என போலி சாமியார் கூறி உள்ளார். இதனால் தீய சக்தியை வெளியேற்ற மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என கூறியதால் மது குடும்பத்தினர் பூஜை செய்ய ஒப்பு கொண்டனர்.
இதனையடுத்து கோதாவரி ஆற்றின் அருகே மதுவை அழைத்து சென்று மாந்திரிக பூஜை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமைப்படுத்திய நிலையில் மது இறந்தார். இதனால் யாருக்கும் தெரியாமல் இறுதி சடங்கு செய்ய போலி சாமியார் திட்டமிட்டனர். ஆனால் போலி சாமியார் பூஜை செய்தபோது உடன் சென்ற மது உறவினர் ஒருவர் ரகசியமாக தனது செல்போனில் எடுத்த வீடியோவை போலீசாருக்கு அனுப்பினார்.
இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததும் உடனடியாக போலீசார், மது தகனம் செய்வதை நிறுத்தி பிரேத பரிசோதனைக்காக சென்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலி சாமியார் உடன் இருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினரிடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.