Skip to content

வாங்க…. போருக்கு போகலாம் லோகேஷ்….. மன்சூர் அலிகான் அழைப்பு…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  சமீபத்தில் வெளியான திரைப்படம்  லியோ,  இதில்  நடிகர் மன்சூர் அலிகானும் நடித்துள்ளார். இந்த நிலையில் அந்த படத்தின் இயக்குனர்  லோகேஷ் கனகராஜ்க்கு,  மன்சூர் அலிகான்  போருக்கு அழைப்பு விடுத்து  வாட்ஸ் அப்பில் தகவல்  வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

500 கோடி முதல் போட்டு, லட்சம் பேருக்கு வேலை குடுத்து, ஒன்றரை  வருஷம் மெனக்கெட்டு, 1000 கோடி வசூலுக்கு பாடுபடுகிறோம்! ஆனா, அரசியல்வாதி ஒரு கையெழுத்து போட்டுட்டு, 10,000 கோடி, 20 ஆயிரம் கோடி ஆட்டய போட்டுறான்!

லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல…
அதவுட்டுட்டு, ‘தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு’ !! ..

இல்லைனா வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி குடுக்கலாம்!

500 மிலிட்டரி டேங்கர், 500 Armed air Craft எடுத்துட்டு வாங்க, போருக்கு போயி, எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சுட்டு வரலாம்! அப்பாவிங்க சாகறாங்க…

சும்மா, டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில குடுத்துக்கிட்டு…….

வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ்!

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!