Skip to content

கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய திருமாநிலையூர் பகுதியில் ஓடும் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதக்கிறது. ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் கூறிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் அமராவதி ஆற்றில் அணையில் இருந்து திறக்கப்பட்ட அதிகப்படியான நீர் வந்தபோது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 25 வயது முதல் 35 வயதுடைய இளைஞராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அமராவதி ஆற்றில் மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!