மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86. கடந்த புதன்கிழமை உடல்நல பாதிப்பு காரணமாக மும்பை பி.டி.இந்துஜா மருத்துவமனையில் மனோகர் ஜோஷி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் மோசமடைந்து இருப்பதாகவும்தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனோகர் ஜோஷி 1995 முதல் 1999 வரை மராட்டியத்தின் முதல்-மந்திரியாகவும் 2002 முதல் 2004 வரை நாடாளுமன்ற சபாநாயகராகவும் இருந்தார். 2006 முதல் 2012 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தார். மேலும் 1999 முதல் 2002 வரை கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மந்திரியாகவும் பணியாற்றினார். இவர் மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சி்யின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். சிவசேனா சார்பில் முதல்வராக இருந்தார்.