மன்னார்குடி பழைய பஸ் நிலையத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய பஸ் நிலையம் ரூ.26 கோடியில் அமைக்கப்படுகிறது. அதற்கான பணி நடந்து வருகிறது. அந்த பணியை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். புதிய பஸ் நிலையம் எவ்வாறு அமைய உள்ளது
என்பதற்கான வரைபடத்தை கலெக்டர் சாருஸ்ரீ முதல்வரிடம் காட்டி விளக்கினார். அப்போது டிஆர்பி ராஜா எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பஸ் நிலைய பணியை விரைவில் முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கிய முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.