திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் பாபா பக்ருதீன்(44). இவரது வீட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல் என்ஐஏ சோதனை நடந்தது. சென்னையிலிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் வந்திருந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
பாபா பக்ருதீன் என்பவர் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக கூறப்படுகிறது. அதனையடுத்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் இவர் தொடர்பில் இருக்கிறாரா மேலும் அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உள்ள ஆவணங்கள், முக்கிய தடயங்கள் எதுவும் இருக்கிறதா என்பது குறித்தும் அவரது தொலைபேசி உரையாடல் மற்றும் தொலைபேசிகளை கைப்பற்றி என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 2021 ம் ஆண்டு பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். தற்போது இரண்டாவது முறையாக இன்று சோதனைநடந்துள்ளது.
காலை 10 மணியளவில் சோதனை நிறைவடைந்தது இதனைத் தொடர்ந்து பாபா பாக்குரூதீனை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர் மேலும் அவரது பென் ட்ரைவ் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்