மத்திய மண்டல காவல்துறையில் கடந்த 2022 ம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய போலீஸ் ஸ்டேஷன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷன், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் போலீஸ் ஸ்டேஷன் , தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை நகர மேற்கு போலீஸ்டேஷன், திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷன், புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் போலீஸ் ஸ்டேஷன், கரூர் மாவட்டத்தில் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் போலீஸ் ஸ்டேஷன், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை முதலிடம் பிடித்துள்ளன. அந்தவகையில் மத்திய மண்டலத்தில் முதலிடம் பிடித்த போலீஸ் ஸ்டேஷன்களின் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜூவால் கேடயம் வழங்கி பாராட்டினார்.