கலெக்டர்கள், எஸ்.பிக்கள், வனத்துறை அதிகாரிகள் வருடாந்திர மாநாடு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களை கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல அறிவுரைகளை வழங்கினார்.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான மாநாடு நேற்று நிறைவடைந்த நிலையில் அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மீண்டும் மஞ்சப்பை என்ற வாசகத்துடன், தமிழ் நாடு அரசு முத்திரையிடப்பட்ட பை வழங்கப்பட்டது. அதில் அதிகாரிகள் கோப்புகளை வைத்து மகிழ்ச்சியுடன் எடுத்து சென்றனர்.