திருச்சி, தொட்டியம் பேரூராட்சி அலுவலகத்தில் மஞ்சப்பை கொண்டு வரும் திட்டம் குறித்து பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தொட்டியம் வட்ட வணிகர்கள் சங்க நிர்வாகிகள் வன்னியர்கள் சங்க பேரமைப்பு மற்றும் டீக்கடை பெட்டிக்கடை பேக்கரி காய்கறி கடை பல வகைகள் கடை சாலை வியாபாரிகள் கடை வார சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெகிழி ஒழித்து மாற்று பை மஞ்சள் பை திட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசின் திட்டத்தில்
பிளாஸ்டிக்கை ஒழித்து அனைவரும் மஞ்சள் பை திட்டத்தை கையில் எடுக்க வேண்டும் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தலைவர் சரண்யா பிரபு பேசினார்
கூட்டத்தில் வணிகர்கள் சங்க. நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட்டால் நிச்சயமாக மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வர முடியும் என்றும் பேசினார் நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜேஷ் செயல் அலுவலர் சண்முகம் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.