பொன்னியின் செல்வன் பட விவகாரத்தில் இயக்குனர் மணி ரத்னம் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்ததாக மணி ரத்னம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.நாவலை தழுவி எடுக்கப்பட்டதே தவிர வரலாற்றின் அடிப்படையில் எடுக்கவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.கல்கியின் நாவலை படிக்காத மனுதாரர் வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும் எனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.