Skip to content
Home » மணிப்பூர் கலவரம்…. கல்லூரிகள் மூடல்….. 2 ஆயிரம் சிஆர்பிஎப் வீரர்கள் விரைவு

மணிப்பூர் கலவரம்…. கல்லூரிகள் மூடல்….. 2 ஆயிரம் சிஆர்பிஎப் வீரர்கள் விரைவு

  • by Senthil

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல்கள் ஏற்பட்டன. இதில், இரு தரப்பிலும்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதன்பின்னர், பல மாதங்களாக அமைதியான சூழல் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பலியானார்கள். இதனால் மீண்டும் அந்த மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில்  போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, 5 நாட்களுக்கு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வன்முறை பாதித்த காக்சிங்கின் சுக்னு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டு பாதுகாப்பு படைகள் கொடி அணிவகுப்பு பேரணியை நேற்று நடத்தினர். மணிப்பூரில் நிலைமை மோசமடைந்துள்ள சூழலில், மணிப்பூர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. 2 நாட்களுக்கு அனைத்து கல்லூரிகளும் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே மணிப்பூர் மாநிலத்துக்கு 2 ஆயிரம்  சிஆர்பிஎப் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து அங்கு விரைந்துள்ளனர்.டிரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள், டிரோன், ஆளில்லா வான்வழி இயந்திரங்களை செயல்படவிடாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளும் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!