பிஷ்ணுபூர், மொய்ராங்கில் குகி தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்டில் முன்னாள் முதல்வர் மைரெம்பம் கொய்ரெங்கின் வீட்டில் மதச் சடங்குகளைச் செய்து கொண்டிருந்த 78 வயது முதியவர் கொல்லப்பட்டார்
இந்த கலவரத்தில் 5 பேர் தற்போது பலியாகினர். அதன்படி, ஜிரிபாம் மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. மேலும் 4 பேர் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மெய்தெய் பகுதிகளில் நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். அந்த 4 பேரும் அப்பகுதியில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் இம்பால் மேற்கு மாவட்டத்தில் அருகிலுள்ள இரண்டு இடங்களில் மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசுவதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதை அடுத்து இந்த ராக்கெட் தாக்குதல்கள் நடந்துள்ளது.
இதன் காரணமாக, பள்ளிகளை மூடுவதாக மணிப்பூர் அரசு அறிவித்தது. அமைதியை மீட்டெடுக்கவும், தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தடுக்கவும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மெய்தெய் மற்றும் ஹ்மார் பிரதிநிதிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்ட போதிலும, தற்பொழுது இந்த வன்முறை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.