இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 3 மாதமாக கலவரம் நடந்து வருகிறது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதைக்கண்டித்து நாடுமுழுவதும் கண்டன கூட்டங்கள், பேரணிகள் நடந்த வண்ணம் உள்ளது. புதுக்கோட்டையில் இன்று, மணிப்பூர் ஒருமைப்பாடு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் கலவரத்தைத் கண்டித்து சின்னப்பாபூங்காவில் கண்டன பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகராட்சி முன்னாள்தலைவர் துரை.திவ்வியநாதன்தலைமை வகித்தார்.இதில் திருச்சி காங்கிரஸ் பிரமுகர் வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராம.சுப்புராமன்,ராசு.கவிதைப்பித்தன், வடக்கு மாவட்டதி.மு.க.செயலாலார்கே.கே.செல்லபாண்டியன்,அரு.வீரமணி,ஆ.செந்தில்,க.நைனாமுகம்மது,சுப.சரவணன்,ராமச்சந்திரன்,தர்மராஜன்,
வழக்கறிஞர் சந்திரசேகன்,அஸ்ரப்அலி,சரீப்,பங்குத்தந்தை கள் ,விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ,இந்தியக்கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிநிர்வாகிகள்உள்ளிட்ட
அனைத்து கட்சி யினர்,வர்த்தககழகத்தினர்,தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்பட
ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் அவர்கள் பேரணியாகப் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று
கலெக்டர் அலுவலகம்அடைந்தனர். அங்கு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.அதில் மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டு இருந்தது.