மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமைபடுத்தியதை கண்டும் காணாமல் உள்ள மத்திய அரசை கண்டித்து இன்று நாகையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் மகளிர் அணியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது பெண்களுக்கெதிரான கொடிய வன்முறைகளை தடுக்க வலியுறுத்தியும். மத்திய பாஜக அரசை
கண்டித்தும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் மணிப்பூர் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், இன மோதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.