கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி பதவி விலக கூறியும் சிவாயம் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளையும், பணிதல பொறுப்பாளர்களை மாற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்கொடுமை வெறியாட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தியும், சிவாயம் ஊராட்சியில் 100 நாள் வேலையில் ஒரு வருட அட்டையில் மற்றொருவர் வேலை செய்யும் முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டியும், பணிதல பொறுப்பாளர்களை மாற்றாமல் ஒரே நபர்களைக் கொண்டு கடந்த நான்கு வருடங்களாக வேலை பார்ப்பவர்களை மாற்ற வலியுறுத்தியும், சிவாயம் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை, சாலை வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்யாமல் இருக்கும் ஊராட்சி நிர்வாகத்தினை கண்டித்தும், முதியவர்கள் என்று பாராமல் அவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அராஜக பூ கூட நடந்து கொள்ளும் சிவாய ஊராட்சி 100 நாள் வேலைத்திட்ட பணிதள பொறுப்பாளர்களை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசுக்கு எதிராகவும், சிவாயம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணிகளை பொறுப்பாளர்களை கண்டித்தும் கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர். மேலும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாலும், நீண்ட வருடங்களாக மற்றவர்களின் பெயர்களில் வேலை பார்த்து வரும் பணிதல பொறுப்பாளர்களை மாவட்ட நிர்வாகம் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதில் கிருஷ்ணராயபுரம் தாலுகாவை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.