Skip to content

காரைக்கால்….மாங்கனித்திருவிழா…. மாங்கனி இறைத்து நேர்த்திக்கடன்

  • by Authour

காரைக்கால் சுந்தரம்பாள் உடனாய ஸ்ரீகைலாசநாத சுவாமி கோவில்(காரைக்கால் அம்மையார் கோவில்) ஆண்டுேதாறும் நடத்தப்படும் திருவிழா மாங்கனி திருவிழா.  இந்த விழா   ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாங்கனித் திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

காரைக்காலில் வாழ்ந்த சிவபக்தையான  புனிதவதி  வீட்டிற்கு வந்து மதிய வேளையில், சிவபெருமான்,  சிவனடியார் வேடத்தில் வந்து உண்பதற்கு அன்னம் வேண்டினார். புனிதவதியும் அன்னத்துடன், தன் கணவர் பரமதத்தன், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றை சிவனடியாருக்கு கொடுத்தார்.

வீடு திரும்பிய புனிதவதியின் கணவர் பரமதத்தன், தான் வாங்கி வைத்திருந்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றை வாங்கி புசித்தார். மாங்கனி நன்கு இனிக்கவே, மீதமுள்ள   ஒரு மாங்கனியையும் புசிக்க வேண்டி, தன் மனைவி புனிதவதியிடம், அதனையும் எடுத்து வரச்சொன்னார்.

இதனைக் கேட்ட புனிதவதி திகைத்து நின்றார். பின்னர்  இறைவா நான் என்ன செய்வேன் என  இறைவனை வேண்டினார். . இறைவனின் அருளால், புனிதவதியார் கையில் ஒரு மாங்கனி கிடைத்தது. அம்மாங்கனியைத் தன் கணவர் பரமதத்தனிடம் புசிக்கக் கொடுத்தார். இறைவன் அருளால் கிடைத்த மாங்கனியை சுவைத்த பரமதத்தனுக்கு, ஏற்கனவே உண்ட முதல் மாங்கனியை விட இது மிகமிக சுவையாக இருக்கவே, இம்மாங்கனி நான் ஏற்கனவே புசித்த மாங்கனியை விட அமைப்பும், சுவையும் மிகமிக மாறுபட்ட காரணத்தை வலியுறுத்தி கேட்க, புனிதவதியார்  இறைவனின்  திருவிளையாடலை எடுத்துரைத்தார்

இதை நம்ப மறுத்த பரமதத்தன், மீண்டும் ஒரு மாங்கனியை இறைவனிடமிருந்து வரவழைத்து தருமாறு கேட்க, புனிதவதியும் அவ்வாறே சிவபெருமானை மனதார நினைத்து வேண்டி, மீண்டும் ஒரு மாங்கனியைப் பெற்றதை நேரில் கண்ட கணவன் பரமதத்தன் மனதில் பயம் கொண்டார். இறையருள் வாய்த்த புனிதவதியைக் கண்டு பயந்து, அவரை விட்டு விலகினார். கணவனே தன்னை ஒதுக்கிய பின்னர், தனக்கு இந்த மனித உடல் இனி எதற்கு என்று இறைவனை வேண்டி கைலாயம் சென்றார், அவரை சிவபெருமான் அம்மையே வருகை என்றார்.  அதன்பிறகு அவர் காரைக்கால் அம்மையார் ஆனார் என்பது புராணம்.

புனிதவதியாரின் இந்த அற்புதத்தை நினைவுகூரும் வகையில்   ஆண்டுதோறும் இந்த விழா காரைக்காலில் கொண்டாடப்படுகிறது.  இன்று காலை  பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி்களுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது.காலை 9.30 மணி அளவில் சப்பரம் புறப்பாடு நடந்தது.  அமைச்சர் திருமுருகன்,  கலெக்டர் மணிகண்டன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.   முக்கிய வீதிகள் வழியாக சப்பரம் சென்றது. முன்னும், பின்னும் பக்தர்கள் திரண்டு வ்நதனர். அப்போது  மாடிகளில் இருந்தும், வீட்டின் முன்பிருந்தும் வேண்டுதலுக்காக  பக்தர்கள் மாங்கனிகளை இறைத்தனர். அதை  சப்பரத்துடன் செல்லும் பக்தர்கள் பிடிப்பார்கள்.

மாங்கனிகளை இறைப்பதன்  மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  செல்வம் பெருகும், திருமண தடைகள் நீங்கும்  என்பது நம்பிக்கை. வழக்கமான  எழுச்சி, உற்சாசத்துடன் இன்று மாங்கனி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!