மாண்டஸ் புயல் காரணமாக நாகை கடலில் நேற்று முதல் ராட்சத அலைகள் எழும்புகிறது. இதனால் நாகை துறைமுகத்தில் 5ம் எண் புயல் உச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் தண்ணீர் கரைகளை தாண்டி வருகிறது. நாகை பட்டினச்சேரி பகுதியில் அலைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்தது. இதனால் 2க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.