திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் அடாவடி செய்து வருகின்றனர். ஸ்டாண்டில் 100க்கணக்காண டூவீலர்கள் நிறுத்துகிறார்கள். ஆனால் டூவீலர் நிறுத்தும் இடத்தில் 12 மணி நேரத்திற்கு 6 ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக பேனாவில் திருத்தி 10 ரூபாய் என அதிகமாக வசூலிக்கிறார்கள். இதை தட்டி கேட்டால் கேட்டால் வாரத்திற்கு 6000 ரூபாய் நகராட்சிக்கு கொடுக்கிறோம் ?எனக்கூறி அடாவடி வசூல் செய்து வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.