திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதற்காக திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் கொண்டுவரப்பட்டு இருந்தது. 300க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்கினர். முதலில் கோயில் காளை விடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மற்ற காளைகள் விடப்பட்டன. வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று சென்றனர். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் கெத்து காட்டி களத்தில் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து கைதட்டலைபெற்றது.
காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன்பிறகு அனுமதிக்கப்பட்டனர். போட்டியை காண ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.