திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கிழவன்பட்டியில், ஜி.ஹெச்.சி.எல் ஆலை நிறுவனத்தின் அறக்கட்டளை சமூக பொறுப்பின் கீழ் கிராமப்புற பெண்களுக்கான கை எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைகளில் 60 நாட்களுக்கான மேம்பட்ட பயிற்சி வகுப்புகள் சமுதாய கூடத்தில் தொடங்கியுள்ளது. மதுரை பெட்கிராட் சுயதொழில் பயிற்சி நிறுவன நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராம் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில், ஜி.ஹெச்.சி.எல் (மதுரை மீனாட்சி மில்ஸ்) மனிதவள மேலாளர் முத்துகுமரன், ஜவுளிப்பிரிவு தலைவர் சதீஸ், எஃப்.கீழையூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.அழகர், ஊராட்சி செயலாளர்(பொ) பெரியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 13ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு கை எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைகளுக்கான 60 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. நிகழ்வில் திட்ட பணியாளர்கள், ஊராட்சி மன்ற மக்கள் பிரநிதிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடங்கப்பட்டுள்ள பெண்களுக்கான கை எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைகளில் மேம்பட்ட பயிற்சி
வகுப்புகளுக்கான உபகரணங்களை பயிற்சியில் பங்கேற்ற 32 பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலை நிறுவனத்தின் அறக்கட்டளை சமூக பொறுப்பு அலுவலர் சுஜின் செய்திருந்தார். நிகழ்வில் வரவேற்புரையை பெட்கிராட் கதிரவன், பயிற்சியாளர் ஜமுனாதேவியும், நன்றியுரையை பெட்கிராட் தலைவர் எஸ்.கிருஷ்னவேணி, துணைத்தலைவர் மார்டின் லூதர் ஆகியோர் கூறினார்.