ஓரின செயற்கை தொடர்பான ஆப் மூலம் ஒன்றிணைந்து போதை பொருள் விற்ற நல்லுசாமி, ரூபன், ஸ்ரீ விக்ரம் ஆகிய 3 பேர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 லட்சம் மதிப்பிலான கொகைன், மெத்திலீன் டைஆக்சி மெத்தாம்ஃபெட்டமைன் (எம்.டி.எம்.ஏ.,) உள்ளிட்ட போதை பொருள் பொருட்கள், செல்போன, சிறிய எடை போடும் கருவி, காலி சிரிஞ்சுகள், எலக்ட்ரால் பவுடர் பாக்கெட்டுகள் பறிமுதல்.
சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி எஸ்.பி வருண் குமார் மணப்பாறையில் பேட்டி அளித்துள்ளார்.