Skip to content
Home » மோசடி வீடியோ….. மணப்பாறை எம்எல்ஏ மறுப்பு….

மோசடி வீடியோ….. மணப்பாறை எம்எல்ஏ மறுப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, சட்டமன்ற உறுப்பினர்  ப. அப்துல் சமது  பண மோசடி புகாருக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது..  எனது மணப்பாறை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மணிவேல் என்பவரிடம் நியாய விலை கடைகளில் பணி நியமனம் வாங்கி தருவதாக எனது பெயரை பயன்படுத்தி பணம் வாங்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து அந்த வீடியோவில் உள்ள நபர் மீது வளநாடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையை வலியுறுத்தி இருக்கிறேன்.

மேலும் எனது பெயரை பயன்படுத்தி இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை யாரும் நம்ப வேண்டாம் அப்படி யாராவது உங்களை அனுகினால் உடனே என் கவனத்திற்கு கொண்டுவருமாறு பொது மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.