கரூர் அடுத்த வாங்கல் பகுதியில் கடைவீதி வழியாக அதிக பாரத்துடன் மணல் லாரிகள் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கல் காவல் நிலையத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
மணல் லாரிகள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி தேநீர் கடைகள், உணவகங்கள், பழக்கடைகள், நிதி நிறுவனங்கள், விவசாய இடுபொருட்கள் விற்பனையகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மணல் லாரி வாங்கல் கடைவீதி பகுதியில் செல்வதால் போக்குவரத்து இடையூறு மற்றும் லாரிகளுக்கு மேல் மணல் தார்பாய்கள் போட்டு மூடி முறையாக எடுத்துச் செல்லாததால் மணல் சாலையின் இரு புறங்களிலும் மணல் கொட்டி கிடப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது ஏற்கனவே அரசு நிர்ணயத்தை அளவைவிட மணல்
அள்ளி வருகின்றனர் என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ள நிலையில் இன்று வியாபாரிகள் ஒன்று சேர்ந்து வாருங்கள் பகுதியில் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு மேல் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒன்றிணைந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.