Skip to content

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த நபர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வி.கைக்காட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனது குடும்பத்தினருடன் விவசாய வேலை செய்து பிழைத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2024 ஜூலை மாதம் சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் சுமார் 10 நபருடன் வெளிநாடு செல்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் த/பெ வெற்றி மணி என்பவரை அணுகியுள்ளனர். பிரசாந்த், சரவணன் மற்றும் அவரது நண்பர்களிடம் சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் விசா உள்ளது அதிகம் சம்பளம் கிடைக்கும் எனவே உடனடியாக பணம் அளித்தால் விசா வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் பிரசாந்த்தின் இரண்டு வங்கி கணக்கில் ரூபாய் 29,12,500 தொகையை செலுத்தியுள்ளனர். மேலும் மெடிக்கல் போர்டு அட்டென்ட் செய்வதற்கு ரூபாய் 1,07,000 தொகையை பிரசாந்திடம் நேரில் கொடுத்துள்ளனர். அதன் பிறகு பிரசாந்த், சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் அனைவருக்கும் போலி விசாக்களை வழங்கி உள்ளார். சரவணன்-க்கு இது போலி விசா என்று தெரிய வந்தது.

இதனை அடுத்து சரவணன் கடந்த 27.01.2025 அன்று, அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச்சை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் உத்தரவின் படி அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அமரஜோதி அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரியலூர் நகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன் (பொறுப்பு மாவட்ட குற்றப்பிரிவு ), தலைமையிலான காவல்துறையினர் பிரசாந்தை விசாரணை செய்ததில், அவர் அளித்தது போலி விசா என்றும், பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்தது உறுதியானது. காவல்துறையினர் பிரசாந்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!