தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழக சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர் விளார் சாலை பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் ரமேஷ் (52) என்பதும், கள்ள சந்தையில் விற்பனை செய்ய 90 மது பாட்டில்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். மேலும் 90 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.