திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு பட்டிக் விமானம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் உடைமைகள் மற்றும் ஆவணங்களை பரிசோதித்தனர். அப்போது சிவகங்கை பெரிய கொட்டப்பட்டியைச் சேர்ந்த கர்ணன் (வயது 53) என்பவர் பாஸ்போர்ட்டில் தந்தை, தாய் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை தவறாக பதிவு செய்து,போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. உடனே இமிகிரேஷன் அதிகாரிகள் கர்ணனை ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து கர்ணனை கைது செய்தனர்.
திருச்சி ஏர்போட்டில்…. போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற நபர் கைது..
- by Authour
